புரோபார்ன் மைதானத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
179 ரன்கள் இலக்கை துரத்திய யூபி, 39 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, நான்காவது இடத்தில் களமிறங்கிய தாஹ்லியா மேக்ரா மற்றும் கிரேஸ் ஹெரிஸ் ஆகியோர், 53 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து, அணியை 100 ரன்களுக்கு மேல் எடுத்துச் சென்றனர்.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு பரபரப்பான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்த அணி. இந்த வெற்றியுடன், பிளேஆஃப் சுற்றுக்குள் நுழையும் மூன்றாவது அணியாக மாறியுள்ளது.
குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது; கிரேஸ் ஹேரீஸ் 72 ரன்கள் எடுத்துப் போட்டி வெற்றியை உறுதி செய்தார்.