அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, குவாஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ரஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உலகக்கோப்பைப் போட்டிப் பந்தயங்கள் நடைபெறும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மிகப் பெரிய போட்டியின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் தேதிகள் வெளியாகியுள்ளன. இந்தப் போட்டிகள் இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும்.
அக்டோபர் 5ம் தேதி துவங்கும் இந்த போட்டி, நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறவுள்ளது.