அல்பர்ட் II (மொனாக்கோ)

மொனாக்கோ பேரரசர் அல்பர்ட் II-க்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. அவரது சொத்துக்கள் மொனாக்கோ அரச சொத்துக்கள், காசினோக்கள் மற்றும் பிற முதலீடுகள் மூலம் வருகின்றன.

முகமது VI (மொராக்கோ)

சொத்து மதிப்பு: $2 பில்லியன். மொராக்கோ மன்னர் முகமது VI அவர்களின் ஆட்சி அரபு உலகில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

தமிம் பின் ஹமத் ஆல் தானி (கத்தார்)

கத்தாரின் அமீர் தமிம் பின் ஹமத் ஆல் தானியின் சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவரது செல்வம் கத்தாரின் பெருமளவிலான இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய வளங்களிலிருந்து பெறப்பட்டது.

ஹன்ஸ்-ஆடம் II (லீக்டென்ஸ்டைன்)

சொத்து மதிப்பு: $4 பில்லியன். லீக்டென்ஸ்டைன் இளவரசர் ஹன்ஸ்-ஆடம் II உலகின் மிகப் பெரும் செல்வந்த மன்னர்களில் ஒருவராவார். அவரது செல்வம் பெரும்பாலும் நிதி நிறுவனங்கள் மற்றும் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்துக்களிலிருந்து வருகிறது.

ஹென்றி கிராண்ட் டியூக் (லக்சம்பர்க்)

சொத்து மதிப்பு: $4 பில்லியன். லக்சம்பர்க்கின் பேரரசர் ஹென்றி கிராண்ட் டியூக்கின் ஆட்சி, ஐரோப்பாவின் அந்தச் சிறிய நாட்டினுள் பரந்து விரிந்துள்ளது.

முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (துபாய், ஐக்கிய அரபு அமீரகம்)

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் துபாயின் ஆட்சியாளருமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் சொத்து மதிப்பு 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் (சவுதி அரேபியா)

சொத்து மதிப்பு: $28 பில்லியன். சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்தின் ஆட்சியும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஹசனல் பொல்கியா (புருணை)

சொத்து: $28 பில்லியன், புருனையின் சுல்தான் ஹசனல் பொல்கியா உலகின் மூன்றாவது பணக்கார ஆட்சியாளர் ஆவார். அவரது செல்வம் பெரும்பாலும் புருனையின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களிலிருந்து வருகிறது.

முகமது பின் ஜாயத் ஆல் நஹ்யான் (ஐக்கிய அரபு அமீரகம்)

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஜனாதிபதியும், அபுதாபியின் ஆட்சியாளருமான முகமது பின் ஜாயத் ஆல் நஹ்யானின் மொத்த சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மகா வஜிராலங்ககோர்ன் (தைலாந்து)

சொத்து மதிப்பு: $43 பில்லியன், தைலாந்தின் மன்னர் மகா வஜிராலங்ககோர்ன் தற்போது உலகின் மிகப் பணக்கார ஆட்சியாளராவார். அவரது சொத்துக்களில் பெரும்பகுதி அவரது நாட்டின் அரசு சொத்துக்களில் உள்ளன.

உலகின் மிகப் பணக்கார மன்னர்கள்

உலகின் பணக்காரரான 10 மன்னர்களின் பட்டியல்

Next Story